பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அனைவருக்கும் வேலை கிடைத்து, வறுமையொழிந்து, வீடுதோறும் போதிய அளவு உண்ணும் நிலை உருவானுல், வருத்தம் குறையும். பாரதியின் குறிக்கோள், வருத்தக் குறைப்பல்ல. பின் எது? o வகுத்தம் அழித்தல் வருத்தத்தை அழிக்க முடியும். எப்போது? அதற்கான ஊற்றுகளைத் துர்த்து விட்டால். அரசியல் விடுதலையைப் பயன்படுத்தி, வறுமையை ஒழித்தால், வருத்தம் பெருக்கெடுத்தொடும் ஒர் ஊற்றுக் கால் அடைபட்டுப் போகும். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்துக்கொண்டு, கசப் பையும் கர்ழ்ப்பையும் தலைமுறை தோறும் பயிரிட்டுக் கொண்டு வருகிருேமே; மற்ருெரு ஊற்றுக்கால். இதையும் அடைத்துவிட வேண்டும்; கசியாதபடி அடைத்துவிட வேண்டும். இன்று பிறந்த குழந்தைக்குப் பசி ஏற்படுகிறது. அதைச் சொல்லத் தெரியாததால் அழுது அறிவுறுத்து கிறது. பசியும் தாகமும் இயற்கை உணர்வுகள். சாதி உணர்வு அப்படியா? இல்லை. தலைமுறை தோறும், மூத்தவர்கள், பிஞ்சு உள்ளங் களில், ஏற்றி ஏற்றி வளர்த்து வரும் நஞ்சே, சாதி உணர்வு. இதற்குப் பாரதியார் கொடுக்கும் நச்சு முறிவு மாத்திரை இதோ: அவர் வீட்டில் பூனை வளருதாம். அதன் நிறம் வெள்ளேயாம். அது குட்டியும் போட்டதாம். ஒன்றல்ல; «\/т.––2