பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 'அன்பென்று கொட்டு முரசே-மக்கள் அத்தனை பேரும் நிகராம் இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்' என்று, முரசு கொட்டுகிருர், உயிர்க் கவிஞர் பாரதியார். பாரதியாரோடு சேர்ந்து, நாமும் அதே முரசு கொட்ட வேண்டாமா? எல்லாரும் ஒன்றென்று முரசு கொட்டுவதில் தயக்கம் ஏன்? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, அப்படி அப்படிப் படிந்துபோனதைக் கலைத்தால், பிழைப்புக் கெட்டுவிடுமோ என்றே மக்கள் அஞ்சி ஒதுங்குகிருர்கள். ஊருக்கு நல்லது சொல்ல வந்த வீரக்கவிஞர் பாரதியார், அத்தகையோ ரைப் பார்த்து, அறை கூவி அழைக்கிருர்: உடன் பிறந்தவர்களைப்போல-இவ் உலகினில் மனிதரெல்லாரும் திடங்கொண்டவர் மெலிந்தோரை-இங்குத் தின்று பிழைத்தி, லாமோ?" என்று இடித்துக் கேட்கிருர் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா? ----- - புலி, ஆட்டை மாட்டை அடித்து விழுங்குதல்போல, மனிதர்களிலும் கையிலோ, அறிவிலோ வலுத்தவர்கள் மற்றவர்களே அழித்து வாழ்வது சரியா? விலங்கு வாழ்க்கை வாழப் பிறந்தோமா? மனித வாழ்க்கை வாழப் பிறந் தோமா? 'தன்னை மிஞ்சியதன்ருே தருமம்' என்று கேட்கத் தோன்றும். தான் உயிர் வாழத் தேவையானவற்றை முதலில் தேடிக்கொள்ளவேண்டும் என்னும் முனைப்பிலும், போட்டியிலும், சிக்கிச் சீரழிகிறது மனித இனம்.