பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 என்றுதேசியகவி உருகினர். இந்த உருக்கமான பாட்டை மேடை தோறும் பாடி, பல நூருயிரம்வரை நாட்டுப் பற்றுளராக்கினர்கள், முத்த தலைமுறையினர். H குடும்பந்தோறும் சிந்தனைப் போட்டி தழைக்கவும், சீரான எண்ணங்கள் மணம் வீசவும் வேண்டாமா? இவை தானே சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சிறப்புச் செய்வன. நாட்டு மக்கள் அனைவரையும், ஒரே அச்சில் வார்த் தெடுக்கும் வீண்முயற்சியைக் கைவிட்டுவிட்டு, சிந்தனை களேத் தூண்டவும், அவற்றை ஆக்க வழிப்படுத்தவும் நாம் முயல்வோமாக. பாரதி வாழ்ந்த காலத்தில், இந்திய மக்கள் எண்ணிக்கை முப்பது கோடி. அவர்கள் பேசிய மொழி ஒன்ரு? இல்லை; பல. ஆயினும் சிந்தனை ஒன்றுடையாள். என்ன சிந்தனை? இந்தியர் என்ற சிந்தன. அக்காலத்தில், வல்லான் வகுத்ததே வாய்க்கால். அக்காலத்தியவர்களில் பெரும்பாலோர், இந்தியர் என்னும் உணர்விலே ஊறியிருந்தார்கள். எனவே, உரிமையோடும் பெருமையோடும் பாரதியார் 'முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்" என்று, கம்பீரமாகப் பாட முடிந்தது.