பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 இன்ருே, இது உள்ளத்தின் படப் பிடிப்பு என்பதை விட, அடையவேண்டிய இலட்சியத்தின் காட்சி என்பதே உண்மையாகும். அகக்கண்முன் தோன்றும் இலட்சியம்-இணைந்த பாரதம்-ஒரே சிந்தனையூறும் பாரதம்-நம் தலைமுறையிலே கை. டவேண்டும். அதற்காக, பாரதியாரோடு சேர்ந்து நாமும், 'எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த கலலறிவு வேண்டும் பண்ணி பாவ மெல்லாம் பரிதிமுன் பணியே போல கண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னுய்' என்று, மனம் உருகி வேண்டுவோமா? வழிபாட்டால் விளைவதல்ல, அறுபதுகோடி மக்களுக் கும் வாழ்வளிக்கும் புதுநிலை; செயற்பாட்டால் விளையும்; தொடர்ந்த செயற்பாட்டால் விளையும் இது. செயலுக்கு வேர், எண்ணுதல். நாம் எண்ணுவதெல் லாம் நல்லனவாக இருத்தல் வேண்டும். எனக்கு மட்டும் நல்லதாக இருந்து, பிறருக்கு பயனற்ற தாகவோ தீமையாகவோ இருப்பது, நல்ல எண்ணமாகாது. நாடெல்லாம் வாழக் கேடொன்றுமில்லை என்பது நம் உயர்ந்த பண்பாட்டின் நறுமணம். இதையே, முப்பது கோடியும் வாழ்வோம்" என்ற வரி யில் பாரதி வழங்குகிரு.ர்.இதை நாம் சிக்கெனப் பிடித்துக் கொள்ளவேண்டும்.