பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f உயிர்வகைகளில் சிறந்தவர்கள் மக்கள். மன்னிதன் வெறும் பொருளல்ல; அவன் ஓர் உயிர்; ஆருவது அறிவையும் பெற்ற உயிர். அறிவை மட்டுமா பெற்றுள்ளது மனித இனம்? இல்லை. உணர்வையும் பெற்றுள்ளது மக்கள் இனம். நாம் வாழும் முறையை அறிதல் வேண்டும். அதற்குத் துணை நிற்பது, அறிவு: பகுத்தறிவு. கற்கக் கற்க நம் அறிவு ஊறும். அறிவு பெருகப் பெருக, தெளிவு பிறக்கும். நல்லது எது, அல்லது எது என்று தெளிதல் முதற் பணி. அதுவே முழுப்பணியாகாது. தெளிந்து தேர்ந்த வழியே, அயராது. தொடர்ந்து நடப்பது, நம் கடமையாகும். ! அறிவு, தெளிவைக் கொடுக்க, உணர்வு உந்தாற்ற லாக உதவும். நல்லுணர்வின் உந்துதலே, நம்மை வழியில் முறியாதபடி இயக்கும். வாழ்நாள் முழுதும் இயக்கும் நல்லுணர்வுத் துடிப்பு, நம் அனைவருக்கும் தேவை. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, என்னை வழி நடத்துவது திருக்குறளும் பாரதியாரின் கவிதைகளும். ஞாலத்தின் தலைசிறந்த நீதி இலக்கியமாக திருக்குறள் விளங்குகிறது. அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தேர்வுக்காகவே சில பாக்களைக் கற்றேன். வழி அறியப் பல குறள்களைக் கற்றேன். இளமைப் பருவத்தே கற்றேன். எனவே, நினைவில் நின்று விட்டன. அப்போதைக்கப்போது குறட்பாக்கள்