பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 - -பிச்சை ஏற்போரைப் பணிகின்ற காலமும் போச்சே." என்று மகிழ்ந்து பாடுகிறர். தன்னட்டவர்க்கும் பிறநாட்ட uಿಹgu அடிமைப்பட்டு வாழாத, சுதந்தர உணர்வுபெற்ற மக்கள் செறிந்த இந்தியாவில், "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-காம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு. என்று. அந்தச் சுதந்தரக்கவி பாரதி பாடினர். இதை நடை முறை வாழ்க்கையாக்குவது நம்முடைய முன் உரிமைக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்ற முழுமனதோடு ஈடுபட்டால், நாமும் பாரதியாரோடு சேர்ந்து, 'சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே-இதைத் தரணிக் கெல்லாமெடுத்து ஓதுவோமே! ! என்று பாட உரிமை பெற்றவர்கள் ஆவோம். பாரதியார். தம் மனக் கண்ணுல் கண்ட தன்னாட்சி இந்தியாவில், "எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும் ஏமாற்றம் தொலைகின்ற காலம் வந்ததே-கெட்ட நயவஞ்சக் காருக்கு நாசம் வந்ததே. என்று துள்ளிக் குதிக்கிரு.ர். - அரை நூற்ருண்டு கழிந்த பிறகும், முப்பதாண்டு தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்திய பிறகும், இக்குறிக் கோளை நாம் அடையவில்லையே! இதற்கு நெடுந்தொலைவில் அல்லவா நிற்கிருேம்? அரசியல் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களா வது நாட்டுக்குரிய கடமையை ஒரளவு நிறைவேற்றி விட்டோம், நம் பங்கைச் செலுத்திவிட்டோம், எனவே ஒதுங்கிவிட்டோம் என்று நிறைவு கொள்ளலாம்.