பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மின்னுகின்றன. ஒரு பாதையைக் காட்டுகின்றன. போகக்கூடாத எல்லை எவை என்பதையும் சுட்டிக் காட்டி எச்சரிக்கின்றன. பள்ளியில்லாத பட்டிக் காட்டிலே பிறந்த நான், கல்விநெறிக் காவலகை வளர்ந்ததற்கு என் இயற்கை உள்ளாற்றலா பொருட்டு? இல்லை. திருக்குறள் அறிவும் உணர்வுமே. திருக்குறள் காட்டும் உறுதியான நீண்ட ஒரு பாதையில், என் வாழ்க்கையெனும் பேரூர்தி ஒடர் , உயர முடிந்தது எதல்ை? யாவரும் கேளிர் என்னும் விண்வெளியில் பறக்க முடிவது எதல்ை? பாரதியாரின் பாடல்களால். நான் கல்லூரிப் படிப்பிற்குக் கால் எடுத்து வைத்த காலம், பாரதியாரின் பாடல்கள் தடை செய்யப்பட்டிருந்த காலம். ஏன், வெளியிடக்கூடாது, விற்கக் கூடாதென்று தடை விதித்தனர். பாரதியாரின் பாடல்களில் பல எழுச்சி பொங்கும் பாடல்கள். அவற்றைக் கேட்கும், படிக்கும் பொது மக்கள், உரிமைக் கனல் கொண்டு விடுவார்கள் என்று அன்று நம்மை ஆண்ட ஆங்கில அரசு மிரண்டது. உரிமை வேட்கை மிகுந்தால் ஒயுதல் செய்யாது தலை சாயுதல் செய்யாது இந்திய விடுதலைக்குப் போரிடு வார்கள் என்று, அன்னிய அரசு அஞ்சியதில் பொருள் உண்டு. பாரதியாரின் பாடல்கள் உண்மையில் இருந்து கொப்பளிப்பன. அவை, 'உள்ளுவது ஒன்று: சொல்லுவது ஒன்று' என்னும் தன்மையில் ஆக்கப் பட்டவை அல்ல. உள்ளத்தில் உண்மையொளி உண்டாகும்போது, வாக்கினிலே ஒளி உண்டாகாமல் போகுமா? பாரதியாரின் பாடல்களில் இயற்கையான உயிர்த்துடிப்பைக் காணலாம்.