பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சொல்லேர் உழவரும் எழுத்தேர் உழவரும் மட்டும் போ தா. உடலுழைப்பிற்குச் சுணங்காதவர்கள், 琵 கோடிக்கணக்கில் தேவைப்படுவார்கள்.

  • M சமுதாயம் எதை மதிக்கிறதோ அது செழிக்கும். நம்முடைய நெடுநாளைய போக்கு என்ன? உடலுழைப்பை இழிவாகக் கருதுதல்.

குருதியைக் கொட்டி, வியர்வையைப் பாய்ச்சி, பயிரிடுவோர் தாழ்ந்தவர்க்ள்; அவமதிப்பிற்கு ஆளானவர் கள். இதுவன்ருே நம் மரபு? பிற உடலுழைப்புப் பாட்டாளி களையும் கீழானவர்களாகவே அவமதித்து வருகிறது நம் சமுதாயம். அத்தகைய உவர்நிலத்தில் உழைப்பு பச்சை கட்டாது. இதை உணர்ந்தவர், பாரதியார். எனவே, 'உழலுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வினில் உண்டு களித்திருப்போரை கிந்தனை செய்வோம்: என்று புதுநெறியை, நன்னெறியைக் காட்டுகிருர், அதை ஏற்ருல், கருத்தால் உழைப்பவர்களை மதிப்பதுபோலவே, கரத்தால் உழைப்பவர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்வோம். அந்நிலையில், அறிவோடு தொழிற் பயிற்சியும் பெறுவோம். "மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம் வான அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்' அங்கேயே நின்றுவிடுவோமா? இல்லை. 'சந்தி, தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்: "காவியம் வளர்ப்போம், நல்ல காடு வளர்ப்போம் கலேவளர்ப்போம்; கொல்ல ருஃல வளர்ப்போம்"