பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 "ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம், உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்.. அத்தனை தொழில்களையும் திறம்படச் செய்வதிலே மகிழும் புதிய இந்தியாவில், பஞ்சம் தலை நீட்டுமா? பற்றுக் குறை வாலாட்டுமா? பாரதியின் கனவு நனவாக அல்லவா மாறியிருக்கும். பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம்: இது நடைமுறைக்கு வந்துவிட்டது. மலை மலையாகத் துணிமணிகள் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. ஏன்? பாரதியார். - - காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்" என்று எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியில்லை. ஏன்? l ஆண்டுக்கு ஆண்டு புதுமைக் கூட்டத் தெரியவில்லை. கலையைப் பழமையில் புதைத்து வைத்திருப்பது போல், கைவினைகளையும் ஒரே பாணியில் மூடி வைத்திருக் கிருேம். * தன்னுட்சி உரிமைபெற்ற ஒவ்வோர் நாடும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இதற்குப் படை பலம் தேவை.படைபலம் பல கூறுகளால், பெருகுவது. படைப்பெருக்கம், படைப் பயிற்சி, இரண்டும்தேவை. அதோடு, படைக் கலன்களும் தேவை. பாரியின் காலத்துப் பட்டாக் கத்திகளை மட்டும் நம்பி இருக்க முடியாது; வில்லும் வேலும் மட்டும் நம்மைக் காப்பாற்ற போதா. இக்காலப் போர்க்கருவிகளையும் செய்து குவிக்கவேண்டும், -