பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o இதோ பசும்புல்; உயரம் அதகம இலகல. சாணவமயை . பறித்துப் பார்ப்போம். வேர்; இல்லை வேர்கள், கண்ணைக் கவர்கின்றன. ஒரு புல்லுக்குப் பல வேர்கள்: இதுவே இயற்கை. அதோ நெல் நாற்று; இரு சாண் உயரம். அதை ஏடுத்துப் பார்த்தால்? வேர்கள் பல காட்சியளிக்கின்றன. ஒர் நெல் தண்டிற்குப் பல வேர்கள். செடியோ கொடியோ எதை ஆய்ந்தாலும், இதே நிலையே. மரத்தின் இயல்பும் வேறல்ல. தலைநீட்டி மக்கள் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், சின்னஞ்சிறு வேர்களே, புல்லுக்கும் நெல்லுக்கும் முல்லைக் கும் மாமரத்திற்கும் உயிர் நாடிகள். அவ் வேர்கள் நசிந்தால் புல்லும் இராது; நெல்லும் இராது. முல்லையும் பட்டுப்போகும்; மாமரமும் வீழ்ந்து போகும். இதுவே இயற்கை. வேர்களைப் பேணுதல் செடிகளே, கொடிகளே, மரங்களைப் பேணுவதாகும். மக்கள் இனத்திற்கு வேர்கள், அவர்களுடைய மொழிகள் ஆகும். அம்மொழிகளில் உயிர்த்துடிப்பு இருந்தால், அவர் களுடைய இலக்கியத்தில் வீறும் ஒட்டமும் வன்மையும் மேன்மையும் தெளிவும் ஒளியும் செறியும். அத்தகைய இலக்கியத்தைப் பயில்வோருடைய வாழ்க்கையில் தெளிவும் கொப்புளிப்பது இயற்கை வீறும் ஒட்டமும் புலப்படுவது இயல்பு.