பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கல்வி செழித்த தமிழ் நாட்டவர், கல்லாமை இருளில் வீழ்ந்து, மெய்மறந்து டெப்பதைக் கண்டு, உலகம் எள்ளி நகையாடியது. . கல்லாமை ყ$)ყზ வு என்பதையும் உணராதவர்களை | மக்கள் என்று அழைக்க முடியுமா? முடியாது. கல்லாமை இழிவைப் போக்கத் துடிக்காதவர்கள், மாக்களுக்கு ஒப்.ானவர்களே. அவர்களைப் பார்த்து, அதட்டிக் கேட்கிரும். 'பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு காமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் கன்ருே? சொல்வீர்!" என்ன பதில் சொல்வார்கள்? ஊமைகளாக நின்ற நம்மைப் பார்த்து, 'தே மதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று ஆணையிட்டார். அப்போது உயிர்ப்பினைக் கண்டார் போலும், 'யாமறிந்த புலவரிலே கம்பனப்போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை" என்று கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் கம்பீரமாக அறிவித்தார். நம்பிக்கையை ஊட்டினர். தலையாட்டிய தமிழர்களைப் பார்த்து, "ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்ருேம், ஒரு சொற் கேளீர்!" என்று உரிமையோடு இடித்த பின்,