பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பாரதியைப் பெற்றதும், பெண். உத்தமர்களை, மேதைகளை, கவிஞர்களை மட்டுமா பெண் இம் பெற்றது? இல்லை. இல்லை. மக்களிடம் முழுமைக்கும் பிறப்பிடம் பெண்ணே. அன்றும் ஆண் பெற்ற பிள்ளே இல்லை; இன்றும் இல்லை. நாளை, ஏதோ நடக்கும் என்று மிரட்டுகிருர்களே! அதுவும் சோதனைக் குழாயில் குழந்தையை உருவாக்கலாம் என்பதே. ஆணின் வயிற்றில் உருவாக்குவதாக மிரட்டல் இல்லை. மக்கள் தோற்றத்திற்கு இடம் பெண்ணினமே. மானிடப் பயிருக்கு நிலம் போன்றவள் பெண். அப் பெண் னினத்தின் நிலையென்ன? அந்தோ அவலம். பெண், அடிமை: காலமெல்லாம் அடிமை. சின்னஞ் சிறு வயதில்? பெற்ருேர்க்கு அடிமை. இளமையில், நடுமை பில்? கணவருக்கு அடிமை. பின்னர்? மகனுக்கு அடிமை: அடிமையாகவே பிறப்பு: அடிமையாகவே வளர்ப்பு: அடிமையாகவே இருத்தல்; அடிமையாகவே இறத்தல். பெண் ஏன் அடிமையாளுள்? இதைப்பற்றி ஆய்ந்து கொண்டே இருப்பார்கள்; ஆய்ந்த முடிவை யார் அறிவர்? எப்போது பெண் அடிமையாளுள்? இதுவும் திராத ஆய்வு. எப்போதோ எப்படியோ அடிமைப்பட்டது பெண் இனம்; நெடுங்காலத்திற்கு முன்னர் அடிமைப்பட்ட து பெண் குலம் உலக மக்களில் பெரும்பாலோர் அடிமை கள்; வழிவழி அடிமைகள் காலம் காலமாக அடிமைகள். மக்கள் இனம் தனக்குத்தானே விதித்துக்கொண்ட கொடும்ைகளில் ஒன்று பெண்ணடிமையாகும். இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, ஆட்சி செலுத்தி வரு கிறது.