பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

öዎ இது விவசாயிக்கு மட்டுமல்ல சாதாரண அறிவுடை யோருக்கும் தெரியும். "கிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம் நீசத்தொண்டு மடமையுங் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்க%ளப் பெற்றிடல் சாலவேயளிதாவதொர் செய்தியாம். என்று பாரதியார் பாடுகிருர். இது கருத்து நிறைந்த பாட லாகும். எனவே, கணவன் மனைவி உறவு ஆண்டான் அடிமை உறவாக இருப்பது மாறவேண்டும். பாரதியார், "அறிவுகொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம். என்று, புதுமைப் பெண்ணின் வாயால், நமக்கு அறிவுரை கூறுகிருர். ஒவ்வொரு ம னிதனும் பின்பற்ற வேண்டிய அறிவுரையே. அடிமைச் சுருளைப் பொசுக்கி ஒருநிலை உணர்வை உருவாக்கில்ை, என்ன பலனைக் காண்போம்? இப்படியொரு கேள்வி முளைக்கும். இதை எதிர்பார்த்த பாரதியாரின் பதிலைப் பார்ப்போம்: "ஆணும் பெண்ணும் கெரெனக் கொள்வதால் அறிவி லோங்கியில் வையங் தழைக்குமாம்: என்று பாடினர் பாரதி. இது, வெறும் ஆசையா? உண்மைய ? உண்மை. ஆண் பெண் சமத்துவம் வாழ்க்கை முறையாகிவிட்ட நாடுகளில் ஒன்று; சோவியத் நாடு. பிறநாட்டார். முந்நூறு ஆண்டுகள் முயன்று பெற்ற