பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அறிவின் எல்லைகளே, சாதனை முடிவுகளை, ஐம்பது ஆண்டு களில் பெற்றுவிட்டது அந் நாடு. அதற்குக் காரணம்? பொருளியல் புரட்சியோடு, வாழ்வியல் புரட்சியும் சேர்ந்து வெற்றிபெற்றதே. முன்னர் கண்டறியாத சாதனைகளுக்கு மூலம், ஆங்கே ஆணும் பெண்ணும் சமம் என்பது சட்டநூலோடு உறைந்திருக்க வில்லை; வீடுதோறும், நாடு முழுவதும் சமத்துவத்தென்றல் தொடர்ந்து வீசுகிறது. பாரதியின் புதுமைப் பெண், நாணும் மச்சமும் காய்கட்கு வேண்டுமாம் ஞானம் நல்லறம் வீர சுதந்திரம் பேணு கற்குடிப் பெண்ணின் குணங்களாம்" என்று முரசு கொட்டுகிருள். இது பேயின் பிதற்றல் என்று அலறவேண்டாம். பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் என்று, கவியரசர் பாரதியார் குறிப்பதைச் சிந்தியுங்கள். பெண்ணுரிமைத் தென்றல், புயலாக மrருதா? இப்படி அச்சப்படுவோர், பயந்து நடுங்குவோர் உண்டு. அவர்கள். "குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம் கொடுமை செய்து மறிவை யழித்துமங் நலத்தைக் காக்க விரும்புதல் திமையாம்' என்னும் புதுமைப் பெண்ணின் கூற்றினை உளங்கொள்வார் • БGTTлг.м. குலம் என்பது இங்கே, சாதியைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது. எல்லாச் சாதியிலும் நல்லகுணத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர். தங்களுக்கென்று சிலம், நெறி முறை, கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின் வழியே வாழும் குடும்பங்கள்