பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 நம் பெண்களை அடக்கி வைத்திருக்கும், கட்டிப், போட்டிருக்கும் பல பழக்கங்களே பிசாசு'கள் என்று வர்ணிக்கிரு.ர். வருங்காலப் பெண் மகளே-விடுதலை பெற்ற பெண் . மகளை மகாகவி பாரதியார் கூப்பிட்டுக் கும்.மியடிக்க வைக்கிரு.ர். அவ்வொலி எங்கோ ஒர் சந்திலே கேட்பதில்லை. தமிழ் நாடு முழுவதும் ஒலிக்கும் அளவு, அந்தப் பெண்களே உரத் துக் கும்.மியடிக்கச் செய்கிரு.ர். "நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்.மியடி’ என்று பாட, நாமும் நம் சிறுமிகளுக்குக் கற்றுக் கொடுத் தல் மிகவும் நல்லது. எந்தெந்தப் பிசாசுகள் ஒழிய வேண்டும்? முதலில், கல்லாமை என்னும் பிசாசு நம்மைவிட்டு அகலவேண்டும். "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் விட்டுக்குள்ளே பெண்ணப் பூட்டிவைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ இப் பாடல் பள்ளிதோறும் பாடப்படுமானல், புதிய சூழ்நிலை உருவாகும். * படித்துத் தேர்ச்சிபெற்ற பெண்கள், விலை கொடுத்து வாங்கியவன் தொழுவத்திற்குச் செல்லும் மாடுகளாக வாழமாட்டார்கள். அவர்களுக்கு, 'மாட்டைய டித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே