பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 "கஞ்சி குடிப்பதற்கிலார்; அதன் காரணம் இவை யென்றறிவு மிலார் தான், பொது மக்கள் என்பதே, பல நாட்டு நீண்ட நாள் படப்பிடிப்பு. உடம்பில் எங்கோ சுரக்கும் சீழ், எங்கோ சேர்ந்து கட்டியாகி உடைவதுபோல், சிற்சில வேளை, இந்நாட்டி லும் அந்நாட்டிலும் தாங்கொனக் கொடுமை, அடக்கு முறை, புரட்சியாக வெடிப்பதுண்டு. அத்தகைய புரட்சியொன்று, ஜார் மன்னன் ஆண்ட இரஷ்ஷியாவில் வெடித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு, அக்டோபர் திங்க்ள் வெடித்த அப் புரட்சி, உலகை உலுக்கியது. உலகின் முதல் சமதர்ம நாட்டை உருவாக்கியது. உலகத்தின் ஆறிலொரு நிலப்பரப்பை, புதிய பாதை யில் செலுத்திற்று. அந்நிகழ்ச்சி, பாரதியாரின் கவனத்தை ஈர்த்தது. அன்னிய ஆட்சி வெகுளுமே என்று அஞ்சுபவரல்லவே பாரதியார்! ஆதரிக்கும் செல்வர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்கவில்லே மகாகவி பாரதியார். அக்டோபர் புரட்சியை வாழ்த்தி வரவேற்றுப் பாடி ஞர். காந்தியடிகளே வரவேற்ற புரட்சியல்லவா அது! புரட்சிக்கு முந்திய இரஷ்ஷியா எப்படி இருந்தது பாரதியே காட்டட்டும்: - "உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை, பிணிகள் பலஉண்டு; பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம்