பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8,3 எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டே யிறப்பதுண்டு, முழுதுமொரு பேய்வன மாஞ் சிவேரியிலே ஆவிகெட முடிவதுண்டு’ அது மட்டுமா? மேலும் படியுங்கள்: பொய்சூது தீமையெல்லாம் அரண யத்திற் பாம்புகள்போல் மலிந்து வளர்ந் தோங்கினவே அந்த நாட்டில்’ பாரதியாரின் படப்பிடிப்பு உண்மை; வெறும் அவ தூறல்ல. இருக்கட்டும். கொடுமையைக் கண்டு கொந்தளிக்கும் மனிதர்களும் இருந்திருப்பார்களே! இருந்தார்கள். சொல்லால், எழுத் தால், அநீதியைச் சுட்டிக் காட்டியவர்கள் அந்நாட்டில் வாழ்ந்தார்களா? வாழ்ந்தார்கள். பொதுமக்கள் தற்குறி களாகக் கிடக்கும் நிலையில், சோற்றை மட்டுமே சிந்திக்கும் நிலையில், மக்கள் தொண்டர்களுக்கு, இம்மென்ருல் சிறைவாசம், ஏனென்ருல் வனவாசம், இவ்வாறங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்தது' எல்லாக் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அம் முடிவு நாட்டு மக்களில் பெரும் பாலோர் புரட்சியாளர்களாகும் வரை காத்திருப்பதில்லை. வயிற்றுப்பாட்டிற்காகவும் சட்ட ஆட்சிக்காகவும் கோடானுகோடி இந்திய மக்கள் ஆங்கில ஆட்சியைப் பொறுத்துக்கொண்டிருந்தார்கள். இந்திய விடுதலைக்குப் போராடியவர்கள், மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மை யினரே! -