பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 இத்தகைய சிறப்புக்குரிய அற்புத" மனிதராகிய காந்தியடிகளைப் போற்றி, பாரதி பாடியதைப் படிப்போம்: வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு கின்ற தாமோர் பாரத தேசங் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க! அடிமை வாழ்வகன்றிங் நாட்டார் விடுதலை யார்த்துச் செல்வம் குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப் படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய் முடிவிலாக் கீர்த்தி பெற்ருய்! புவிக்குளே முதன்மை யுற்ருய்!" நீண்ட அடிமைத்தனத்திற்குப் பிறகு, நம் இந்தியா அரசியல் விடுதலை பெற்றது. அதற்காகப் பாடுபட்டவர்கள் பல இலட்சக் கணக்கானவர்கள்; தியாகஞ் செய்தோரும் இலட்சக்கணக்கில். அனைவருக்கும் எழுச்சியூட்டிய மாபெரும் உரிமை மின் பொறியாக விளங்யெ பர், அண்ணல் காந்தியடிகள் ஆவார். இந்திய விடுதலேக்குக் காந்தியடிகள் ஆற்றிய தொண்டு இ.ேணயற்றது: புதுமையானதும் ஆகும். பன்னெடுங்காலமாக, அரசியல் என்ருல் சூதும் வாதும் செறிந்தது என்பதே பொருள். - = காந்தியடிகள். இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தலைமையேற்ற பிறகு அந்நிலையை மாற்றிக் காட்டினர்.