பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாகிறது. இல்லையேல் தானே பட்டுப்போகிறது. - பசுங்கன்று பிறக்கிறது; வளாகிறது: காளையாகிறது: ஏர் உழுகிறது: வண்டி இழுக்கிறது; பொட்டென்று வீழ்கிறது. மாக்களுக்குச் சித்தம் இல்லை; சிந்தனை இல்லை: இலட் சியம் இல்லை; முயற்சி இல்லை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நந்திகளும், யானைகளும் எப்படி இருந்தனவோ, அப்படியே இக்கால நந்திகளும் யானைகளும் இருக் கின்றன. அவற்றின்நிலை இருத்தல்: வாழ்தல் அல்ல. மக்கள் நிலை, மற்ற உயிர் இனங்களில் நிலையல்ல; பிற வற்றிற்கு மாமுனது. கல்தோன்றி மண் தோன்ருக் காலத்தே பிறந்த மனிதர்கள், இன்று அதே நிலையிலா இருக்கிருர்கள்? இல்லை. இக்கால மக்கள் எவ்வளவோ விதங்களில் மாறியுள் ளார்கள்; பல துறைகளிலும் மாறி வாழ்கிருர்கள். உடையில் மாற்றம்; உணவில் மாற்றம்; உறையுளில் மாற்றம்: வழிபடுதலில் மாற்றம்: பழக்க வழக்கங்களில் மாற்றம்: அமைப்புகளில் மாற்றம்; பொழுது போக்கும் வகைகளில் மாற்றம்! இத்தனை மாற்றங்களும் எப்படி நிகழ்ந்தன? சிந்தனை யால் விளைந்தன. அத்தனை பேரும் சிந்தித்தார்கள் என்று சொல்ல முடியாது. தலைமுறைக்குத் தலைமுறை, ஒரு சிலர், தம்மை மறந்து உலகை நினைத்துச் சிந்தித்தார்கள். சான்றேர்களின்