பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரிய சிந்தனைகள் புதிய வெளிச்சங்களே. வழிகள்: காட்டின; மக்களிடம் இழையோடியுள்ள தன்னல் உணர்வை, விலங்குப் போக்கை, இழிதன்மையை அவிப்ப தற்குத் துணை நிற்கின்றன. பலருடைய வழிபாடு, தன்னலத்திற்காக என்பதை அறிவோம்: இம்மையில் வளமும், வசதியும் பெருகும்படி வேண்டுவதே, மக்கள் மரபாக உள்ளது. அம் மரபிலிருந்து, விடுபடுதல் அரிது. இறை உணர்வுடைய கவியரசர் பாரதியார், பல தோ கதிரப் பாட்டுகளைப் பாடியுள்ளார். பல வரங்களைக் கோருகிருt: காணிகிலம் வேண்டும்-பராசக்தி காணிகிலம் வேண்டும்-அங்கு தூணில் அழகியதாய்-கன்மாடங்கள் துய்யகி றத்தினதாய்-அந்த காணி லத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்' என்று பாரதியார் பராசக்தியை வேண்டும்போது, பல பக்தர்கள், 'உம்' அவரும் நம்மைப்போன்றே, நீரும் நிலமும் சொத்தும் சுகமும் வேண்டுமென்று வழிபடுகிரு,ே என்று நொடிப்பொழுது நினைப்பார்கள். தொடர்ந்து அந்தக் கவிதையைப் படித்தால் நினைப்பிலே மாற்றம் ஏற்படும்; அறிவிலே தெளிவு ஏற்படும் மனிதன் சிந்திக்க வேண்டியவன், விரும்: வேண்டியவன். எதை எதையோ சிந்தித்து அழுக்காதல் சரியல்ல. கண்டதையெல்லாம் விரும்பி விழைந்து, நாடித் தேடி நலிவது சிறப்பல்ல,