பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 எனவே கவிஞர்களும் எழுத்தாளர்களும், சொல்லே ருழவர்களும் அறிவுக்கடல் களும், வையத்தொண்டிற்கே தத்தம் திறமை வாய்த்துள்ளது என்பதை உணர்ந்தால்? தென்னையின் கீற்றுப் போன்றவை தமக்கு வாய்க்கும் பிழைப்பும் நிதியும் புகழும் செல்வாக்கும் என்று தெளிந்தால்? வையத்தின் தொல்லைகளில் பல விரைந்து உதிர்ந்துவிடும் என்பது உறுதி. 13 பாரதியாரின், காணி நிலம் வேண்டும்' என்னும் பாட்டைப் போன்றே, அவருடைய நல்லதோர் வீணை" என்னும் பாட்டும் நம் கவனத்திற்குரியதாகும். பருவம் கடந்துவிடாதவர்கள் மனப்பாடஞ் செய்து கொள்ளுதல், நல்லது. ஏன்? இது அடிக்க்டி நினைவில் மின்னுமானல், சோர்வும் சலிப்பும் மின்னலின் விரைவில் மறையும். பணக்கட்டோ, ஜனக்கட்டோ இல்லாத எளியேனிடம், இருபத்து நான்கு ஆண்டுக்கு முன்பு, சென்னை மாநிலப் பொதுக்கல்வி இயக்குநர் பொறுப்பு வந்தடைந்தது. அப்போது, ஆசிரியர் சமுதாயம் தளர்ந்திருந்தது. ஆனால், இப்பாடலை நான் ஒப்புவிக்கக் கேட்டு அயர்வை உதறினர்; ஆர்வம் பொங்கிற்று, செயற்கரிய செய்தார்கள். நம் சமுதாயத்தில், கைவினைஞர்கள் சிலரே. எளிய கைவினைகளைக்கூடத் திறம்படச் செய்யும் ஆற்றலை நாம் பரவலாக வளர்க்கவில்லை.