பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4¹ முன்னுரை தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி, 'என்றுமுள தென்றமிழ்' என்று இதன் காலத் தொன்மையி னைக் கம்பர் போற்றியுள்ளார். இம்மொழி, தான் தோன்றிய காலம் தொடங்கி இன்றளவும் செய்யுள் வழக்கிலும் உலக வழக்கிலும் நிலைபெற்று விளங்கு கிறது. அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இரட்டைக் காப்பி யங்கள், திருமுறைகள், திவ்வியபிரபந்தம், திருத் தொண்டர் புராணம். இராமகாதை முதலிய எண் ணற்ற உயர் இலக்கண, இலக்கியங்கள் இம்மொழி யின் அழியாச் செல்வங்களாகும். பதினான்கு சாத் திரங்களை அருளிய சந்தான குரவர்களையும், அருண கிரிநாதர், தாயுமானவர், பட்டினத்தார், இராமலிங்க அடிகள் போன்ற அருளாளர்களையும் பெற்றது இச் செந்தமிழ் மொழி. இம்மொழி முன்னைப் பழை மைக்குப் பழைமையாய், பின்னைப் புதுமைக்குப் புதுமையாய்க் காலத்தை வென்று கன்னித்தமிழ் என் னும் சிறப்புடன் விளங்குவது. இத்துணைச் சிறப்பு களைப் பெற்றிருப்பினும், இக்கால வாழ்க்கைக்குரிய புத்தம் புதிய கலைச்செல்வங்கள் தமிழ் மொழிக்கு இன்றியமையாத் தேவையாகும். வாழ்வியற் கூறு சுளான வாணிகம், அரசியல்,சட்டம், மெய்ப்பொருள், கவின்கலைகள், புவியியல் போன்ற எண்ணற்ற துறை களிலும் தமிழ் மக்கள் மேனாட்டாருடன் போட்டி யிடும் அளவுக்கு உயர்நிலை பெற்றிடும் காலம் இது. விண்கலங்கள் வெல் அண்மையில், மனிதன் நிலா மண்டலத்தில் உலா வரும் அளவுக்கு அறிவியல் வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது. வெட்ட வெளியில் பறக்கின்றன. மனித ஆற்றல் இயற்கையை லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. பொருளியல் வாழ்க் கையில் உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. நாளும் புதுமை காணும் வேட்கை ஆய்வுல கில் வேகமாக வளர்ந்து வருகிறது. இவற்றையெல் லாம் இக்காலத்தில் வாழும் மக்கள், கத் தமிழ்மக்கள், அறிந்து பயன்பெற வேண்டுவது மிக மிக இன்றியமையாததாகும். இத்தேவை நிறைவேறும் வகையில் வாழ்வியற் செய்திகளைச் செவ்விய முறை யில், பல்வேறு துறையறிஞர்கள் வாயிலாகத் தொகுத்தும் விரித்தும் வகை செய்தும் தருகின்ற அழியாக் கலைச் சுரங்கங்களாகிய கலைக்களஞ்சியங் களை உருவாக்குதல் காலத்தின் கட்டளையாகும். மனித வளர்ச்சியின் நாட்குறிப்புகள் களஞ்சியங்கள் எனல் மிகையாகாது. இக்காலச் செய்திகளை நிரல் படத் தொகுத்து வழங்குவதும் இவற்றின் இயல்பா கும். கலைச் செய்திகளைக் களஞ்சியத்தில் வடிக்கும் போது, அவை அழியாச் சிலைவடிவங்களாக நிலை பெற்றுவிடுகின்றன. இத்தகைய பெரும் பணியினை - திருப்பணியினை - பல்கலைப் பணியினை - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலை நோக்குடன் மேற் கொண்டுள்ளது. தமிழக வரலாற்றில் இது குறிப்பி டத்தக்க நிகழ்ச்சியாகும். இதற்கு முன்னோடியாக 1947-இல் அன்றைய தமிழகக் கல்வி அமைச்சரும், தமிழ் வளர்ச்சிக் கழகத் தின் தலைவருமான மதிப்பிற்குரிய முதுமுனைவர் திரு. தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள் தூண்டுதலில் திரு. பெ. தூரன் அவர்கள் இத் திருத் தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண் டார்கள். இப்பெருந்தகைகளுக்குத் தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையது. இக்களஞ்சியப் பணியினைத் திறம்பட ஏற்று நடத்திய அறிஞர் அனைவரும் பாராட்டுக்குரியர்.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளி யிடப்பெற்ற கலைக் களஞ்சியம் ஏறத்தாழ 7500 பக் கங்களில் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. அவற் றுள், முதல் தொகுதி 1947-இல் தொடங்கப்பெற்று, 7 ஆண்டுகள் கழித்து 1954-இல் வெளியிடப்பட்டது. ஏனைய ஒன்பது தொகுதிகளும் 1968 வரையுள்ள இடைப்பட்ட ஆண்டுகளில் வெளிவந்தன. இவை 1968 வரையுள்ள செய்திகளை உள்ளடக்கமாகக் கொண் டுள்ளன. ஆனால், இவ்வாழ்வியற் களஞ்சியம் இன்று வரை வளர்ந்துள்ள கோட்பாடுகள், கொள்கைகள், கருத்துக்கள், செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கித் திகழ்கிறது. புதிய களஞ்சியத்தில் பின்வரும் துறை கள் ஆழமாகவும் அகலமாகவும், நுட்பமாகவும் திட்ப மாகவும் கருதப்பட்டுக் கட்டுரைகள் பெறப்பட்டுள் ளன. அவை: மொழி, மொழியியல், கல்வியியல், மெய்ப்பொருளியல், வரலாறு, தொல்லியல், சுல் வெட்டியல், உளவியல், சமூகவியல், மேலாண்மை யியல், பொருளியல், வணிகவியல், வங்கியியல், மக்கள் தொகையியல், மானிடவியல், அரசியல், சட்டவியல், புவியியல், கவின்கலையியல், நாட்டுப்புறவியல், விளை யாட்டியல் முதலியன. பழைய களஞ்சியத்தின் முதல் தொகுதியிலும் 10-ஆம் தொகுதியிலும் (இணைப் புத் தொகுதி) சேர்த்து அ,ஆ-வில் ஏறத்தாழ 800 வாழ்வியற் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புதிய களஞ்சியத்தில் அ, ஆ-வில் ஏறத்தாழ 1600 தலைப் புகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'அ'கரத்தில் மட்டில் 1000 பக்கங்களில் 900 தலைப்புகளைத் தாங்கி முதல் தொகுதி வெளிவருகிறது. பழைய களஞ்சி யத்தில் பல பொருள்கள் குறித்த கட்டுரை கள் அமைந்திருப்பினும், அவை தனித்தனித் துறை களுக்குட்பட்டு விரிவாக்கம் பெறாமல் பொது விளக் கம் தரும் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகக் களஞ்சியத்தில் பெரும்பா