பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இண்டால் கைப்பற்றியிருந்தனர். வான்பாப்பனின் ஆவோ சனையின்படி இண்டன்பர்கு நாசிகளின் தலைவ ரான அடால்பு இட்லரைச் செருமனியின் வேந்த ira (Chancellar) அமர்த்தினார். இண்டன்பர்கு அரசியல் சூழ்ச்சியினை உணரும் திறமையின்றி, இட்லரின் கைகளில் வெறும் பொம்மையாகக் காணப்பட்டார். சூழ்ச்சியின்மூலம் இட்லர் 1934 ஆம் ஆண்டில் தமது எதிர்க்கட்சியினரை அழித்தபோது. அந்நிகழ்ச்சியினைப் பாராட்டி வாழ்த்துத் தந்தி ஒன்று இண்டன்பர்க்கின் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. அத்தகு தந்தியை இவர் அனுப்பியிருப்பாரா என்பது ஐயமே. நோய்வாய்ப் பட்டிருந்த இவர் 1934-ஆம் ஆண்டு ஆகசுட்டு 2-ஆம் நாள் நியுடெக்கு (Nudeck) நகரில் காலமானார். செருமனியின் வரலாற்றின் மிகவும் சிக்கலான காலத்தில் பொறுப்பான பதவிகளிலிருந்து திறம்படச் செயலாற்றியவர் இண்டன்பர்கு. இவர் பிறருடைய உழைப்பில் தமது புகழை வளர்ப்பவர் எனவும் இக் கட்டான குழ்நிலைகளில் முடிவெடுக்க இயலாதவர் எனவும் தனித்து நின்று செயலாற்றும் திறமையற்ற வர் எனவும் பலவாறாக மதிப்பிடப்பட்டுள்ளார். இயலாத நிலையிலும் பதவி விலக மனமில்லாது இறக்கும்வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த பேராசைக்காரர் என்றும் இவர் குற்றம் சுமத்தப் பட்டுள்ளார். இவர் தவறுகள் புல இழைத்திருந் தாலும்,நாட்டுப்பற்று மிக்கவராய்ச் செருமனியின் வளர்ச்சியிலும் உயர்விலும் அக்கறை கொண்டு, அரும்பாடுபட்டார் என்பது மறுக்க இயலாதது. வ.இரா இண்டால் என்பவர் மொகலாயப் பேரரசர் பாபரின் மூன்றாம் மகன்; உமாயூனின் தம்பி. காம் சான் (Kamran), அசுகாரி (Askari) ஆகிவோர் ஏனைய தம்பியர். பாபர் காலமான மூன்று நாள் களுக்குப் பின்னர் உமாயூன் அரியணை ஏறினார். அவருக்குப் பல தொல்லைகள் வந்தன. அவற்றுள் ஒன்று அவருக்கு அவர் தம்பியரால் ஏற்பட்ட தொல்லையாகும். முதல் மகனே அரசுக் கட்டிலுக் குரியவன் என்னும் மரபினை மொகலாய மன்னர்கள் பின்பற்றாத காரணத்தால், உமாயூனின் மூன்று தம்பிகளும் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தனர். உமாயூன் தம்பியர் மீது இரக்கம் காட்டி, ஒவ் வொருவகுக்கும் நாட்டின் பகுதிகள் சிலவத்தை அளித்து அவற்றை அவர்கள் ஆட்சிக்குட்படுத்தினார். அதன்படி ஆள்வார் (Alwar) பகுதி இண்டாலுக்குக் (Hindal) கிடைத்தது. அதன் விளைவாகப் பேரரசு ஒன்றுபட முடியாமல் நலிந்தது. 109 இண்டிகா இண்டிகா: பாரத நாட்டின் பண்டைய வர லாற்றை அறிய உதவும் பல்வேறு ஆதாரங்களுள் மெகசுதனீசு என்பார் எழுதிய இண்டிகா என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இவர் கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் மௌரியப்பேரரசுக் காலத் தில் இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டவர் ஆவார். மகா அலெக்சாந்தருக்குப் பிறகு, பாரசீகம், பாபி லோன் நாடுகளை ஆண்ட செ லூகசு நிகேடார், இவரைக்கிரேக்கத் துதராக மௌரியரின் பேரவைக்கு அனுப்பியிருந்தார். இத்தூதர் சந்திரகுப்தப் பேர ரசனுடன் (ஆட்சிக் காலம் ஏறத்தாழ கி.மு.325-301) அவன் தலைநகராகிய பாடலிபுத்திரத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். இவர் ஆக்கிய நூல் இண்டிகாவாகும். அந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. இவர் கூறிய செய்திகள் பிற நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. சே. டபிள்யூ. மெக்ரிண்டல் ((J.W. Magrintal) என்ற அறிஞர்தாம் முதலில் இதைக் கிரேக்க மொழியி லிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியவர், பேரறிஞர் இசுவான்பெகுக் (கி.பி. 1846) என்ற செரு மசனியர், சிதறிக் கிடந்த மெககதனீரின் குறிப்பு களைத் தொகுத்து ஒழுங்குபடுத்தினார். இந்தியா வைப்பற்றி மேனாட்டினர்க்கு மிகுதியாகத் தெரியாத பண்டைக் காலத்தில், இந்நாட்டைப் பற்றிப் பல தவறான கருத்துகளையும் அவர்கள் கொண்டிருந்த னர், ஓரளவு அக்குறையை நீக்க இண்டிகா உதவியது. கிரேச்சு மொழியில் எழுதப்பெற்ற இந்தால் நான்கு பகுதிகளையுடையது. ஆனால் இது அட்டிகா மொழிப்பிரிவைச் சேர்ந்ததா அயோனிய மொழிப் பிரிவைச் சேர்ந்ததா என்பது விளக்கமாக அறியப் படவில்லை. இண்டிகாவில் காணப்பெறும் பின்வரும் குறிப்பு கள் நம் சிந்தனைக்குரியன. 'இந்திய நாடு கிழக்கு மேற்கில் 28,000 இசுடாடியா, தெற்கு வடக்கில் 32,000 இசுடாடியா (15 இசுடாடியா 12 கல்லுக்கு ணையானது). நீளமும் அகலமும் கொண்ட பரந்த நாடு. காலந்தவறாமல் இங்கே மழை பெய்வதால் பஞ்சம் ஏற்பட்டதில்லை, மலைகளுக்கும் ஆறுகளுக் கும் இந்நாட்டில் குறைவில்லை. போர்க்காவத்தில் கூட, இந்தியர்கள் தமது கடமையான வேளாண்மைத் தொழிலை விட்டுவிடாமல் ஊக்கமுடன் மேற் கொள்ளுகின்றனர். போர் புரிவதில் அறக் கொள்கை பின்பற்றப்படுகிறது. சிறந்த யானைகள் இங்கே மிகுதி. இதன்காரணமாகவே அயலவர் பலர் இங்கே படையெடுக்க அஞ்சினர்'. அலெக்சாந்தர் வட மேற்கு இந்தியாவிலிருந்து கங்கைப் பகுதிக்குப் படையெடுத்துச் செல்லாததற்கு மெகசுதனீசு கூறும்