டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 103.
-யிலே எச்சரிக்கை செய்து முடித்த பிறகே போர்
தொடங்கப் பெறும் என்பர்.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியிடை விரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும எம்.அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மரம்
-புறநானூறு 9 : 1-5
எனப் புறநானூறு புலப்படுத்துவதனைக் காண்க.
எனவே திருமூலரும்,
யாவர்க்கு மாம்பசுவுக்கொரு வாயுறை
என்று கூறுகிறார். பசுவைக் கண்டால் ஒரு புல்லை எடுத்துப் போட்டு உன் அறவுணர்வைப் புலப்படுத்து என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.
மூன்றாவதாக ஒருவர் உண்னுமுன் பிறர்க்கென
என்று தி ரு மூ ல ர் குறிப்பிடுவார். ‘பசி என்று வந்தவர்க்குப் புசி என்று ஒரு பிடி கொடுத்துப் பாரப்பா’ என்கிறார் இக்காலக் கவிஞர் ஒருவர். எல்லா நூல்களின் சாரமாகவும் இலங்கும் கொள்கை, தமக்குக் கிடைத்த உணவினைப் பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்பதாகும் என்கிறது உலகப் பொதுமறையெனக் கொள்ளத்தகும் திருக்குறள்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
-திருக்குறள் : 322