பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வாழ்வியல் நெறிகன்

எனவே தமக்குக் கிடைத்த உணவின் ஒரு பகுதியிணை பிறர்க்கென வழங்கும் பெருமனம் வேண்டும் என்பார் திருமூலர்.

யாவர்க்கு மாம்.உண்ணும் போது ஒருகைப்பிடி.

திருவள்ளுவர் பெருமான் இவ்வுலக மக்கள் இன் சொலால் மட்டுமே மகிழ்வெய்துவர் என்பதனைப் புலப்படுத்துவார். இனிய சொற்கள் இருக்கக் கடுஞ் சொற்களைப் பேசுவது, உண்ணுவதற்குக் கனி இருப்பக் காயினை விரும்பி உண்ணுவதனையொக்கும் என்பர்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்க் தற்று

-திருக்குறள் 10ே

இதனையே பிறிதொரு கவிஞர் ஒருவர்,

இன்சொலால் அன்றி இருர்ே வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே - என்பார். ஆதலின் வாயால் இன்சொல்லினையே விரும்பிப் பேச வேண்டும் என்ற கின்றது. பாரதி கூட மக்களைப் பார்த்து,

கிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர் என்று தொடங்கி, இறுதியில்

அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளுவீர்

என்று முடிக்கின்றார்.

எனவே பிறர் மனம் வருந்தப் பேசாமல் அவர் மனம் உவக்கப் பேசும் திறத்தில் வல்லவராகத் திகழ

வேண்டும். இதனையே திருமூலர் பெருமாள்,