பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 13

இறைவனை வணங்கி வாழ்தல் வேண்டும். பாப்பா வுக்கு அறிவுரை கூறவந்த பாரதியார்,

உயிர்களிடத்தில் அன்புவேணும்; தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்: வயிர முடைய நெஞ்சு வேணும்; இது வாழும் முறைமையடி பாப்பா

என்பார். பல சமயத்தவரும் பல்வேறு திருப்பெயர் களிட்டு அழைத்து, பல்வேறு வகையாகத் தொழு தாலும் இறைவன் ஒருவனே என்பார் காமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

அல்லா என்பார் சில பேர்கள்

அரன் அரி என்பார் சில பேர்கள் வல்லான் அவன் பரமண்டலத்தே

வாழும் தங்தை என்பார்கள் சொல்லால் விளங்கா கிர்வாணம்

என்னும் சிலபேர் சொல்வார்கள் எல்லாம் இப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே.

‘கடவுள் உண்டு என்றிரு; ஒன்று என்று இரு’ என்று பெரியோர் புகல்வர்!

ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு, இறை கம்பிக்கை கொண்டவுடன் அந்த இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதனையும் காமக்கல் கவிஞரே கலமுற கவின்றுள்ளார்.

அந்தப் பொருளை நாம் கினைந்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம் எந்தப் படியாய் எவரதனை

எப்படித் தொழுதால் தமக்கென்ன