பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்

தமிழக வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் பொற்காலங்கள் என்று குறிக்கப்படுவன இரண்டு காலங்களாகும். ஒன்று சங்க காலம், பிறிதொன்று பிற்காலச் சோழர் காலம். சங்க காலத்தில் கபிலர், பரணர், ஒளவையார், கக்கீரர் முதலிய புலவோர் புகழ் பூத்து விளங்கியமை போல், பிற்காலச் சோழர் காலத் தில் தெய்வப்புலமைச் சேக்கிழாரும், கவிச் சக்கரவர்த்தி கம்பரும், கலிங்கத்துப்பரணி பாடிய சயங்கொண் டாரும், களவெண்பா இயற்றிய புகழேந்தியும் , தெய்வப் பரணியாம் தக்கயாகப் பரணி தந்த கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

கோவை உலா அந்தாதிக்கோர் ஒட்டக்கூத்தன் என்னும் பாராட்டு, சிற்றிலக்கியங்களாம் கோவை யினையும் உலாவினையும் அக்தாதியினையும் பாடிப் பெருஞ்சிறப்புப் பெற்றவர் ஒட்டக்கூத்தர் என்பதனை கன்கு வெளிப்படுத்துகின்றன. விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய சோழப் பெருமன்னர் மூவர் காலத்திலும், ஒட்டக் கூத்தர் அவர்கட்குக் கல்வி