120 வாழ்வியல் நெறிகள்
கற்பித்த ஆசிரியராய்ப் பின் அரண்மனைப் புலவராய் இறுதியில் ளு ா ன சி சி ய ர ா ய் விளங்கித் தம் தொண்னு ற்றேழாவது வயதில் சிவகதி அடைக் துள்ளார்.
தக்கயாகப் பரணி பற்றியும் ஒட்டக்கூத்தர் பற்றி யும் சற்று விளக்கமாகக் காண்போம்.
பரணி
பரணியென்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகைக் பிரபந்தங்களுள் ஒன்று போர் முகத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரன்மேற் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு முதலிய உறுப்புகளை அமைத்து அவனுடைய பல்வகைச் சிறப்புகளையும் பலமுகமாகப் புறப்பொருளமைதி தோன்ற ஆங்காங்கு விளக்கிக் கலித்தாழிசையாற் பாடப்படுவதென்பர்; பெரும் போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடு வதையும் பரணியென்று கூறுவர்.
பரணியென்னும் பெயர்க் காரணம் பலவாறாகக் கூறப்படினும் காளியையும் யமனையும் தன் தெய்வ மாகப் பெற்ற பரணியென்னும் காண்மீனால் வந்த பெயரென்பதே பொருத்தமுடையதாகத் தோற்று. கின்றது. இது காடு கிழவோன் யூத மடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகுபட்டது. பரணிகாட் பெயரே’ என்னும் திவாகரம் முதலிய வற்றால் விளங்கும்.
ஏனைங் பிரபந்தங்களைப் போலப் பாட்டுடைத் தலைவன் பெயருடன் வழங்காமல் தோல்வியுற்றோ ருடைய பெயருடன் சார்ந்தே இச்சிற்றிலக்கியம்
வழங்கும்.