பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 121:

பரணி.காளிற் கூழ் சமைத்துக் கூளிகள் காளிக்குப் படைப்பது மரபென்பர்; இது காடுகெழு செல்விக்குப் பரணி.காளிற் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்கு (தொல்: செய்; நூற்பா 149) என்னும் பேராசிரியர் உரையாலும், இலக்கிய வழக்குகளாலும் கன்கு அறியலாம்.

‘பரணி பிறந்தான் தரணி யாள்வான்’ என்னும் பழமொழியும், பரணி யானை பிறக்த காளாதலின் அதுபோலப் பகையை இவன்மதியான்’ என்று கச்சி னார்க்கினியர் எழு திய உரையாலும் (சீவக. 1813) பரணி நாள் வெற்றியின் தொடர்புடையதென்பதை

அறியலாம்.

தக்கயாகப் பரணி

தக்கயாகப் பரணி பென்பது தக்கன் சிவ பெருமானை அவமதித்துச் செய்யப் புகுந்த யாகத்தை பூரீ வீரபத்திரக்கடவுள் அழித்து அவனுக்கு உதவி புரிய வந்த தேவர்களையெல்லாம் வென்று, அவனு டைய தலையையும் தடிந்த வரலாற்றைப் பொருளாக அமைத்துக் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்த ரென்னும் புலவர் பெருமானால் இயற்றப் பட்டது. விக்கிரமசோழன் முதலிய மூவருடைய அவைக்களத்தை அலங்களித்து விளங்கியவராயினும் இக்கவிஞர் பெருமான் அம்மூவருள் மூன்றாமவனாகிய இரண்டாம் இராசராச சோழனுடைய வீரச்செயல் முதலியவற்றை உவமை முகத்தாலும் வேறுவகையாலும் ஆங்காங்குப் பலபடப் பாராட்டிச் செல்லுவதால் இந் நூல் அவன் விருப்பப்படியே செய்யப்பட்டி ருத்தல் கூடும்.