122 வாழ்வியல் நெறிகள்
காலத்தால் முக்திய கலிங்கத்துப் பரணியினின்றும
வேறுபட்டுள்ள இதன் அமைப்பைப் பார்க்கையில் அப்பரணிக்கு முன்னரே சில பரணிகள் இருந்திருக்க வேண்டுமென்றும் அ வ ற் றி ன் வழியையும்,
‘பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி’ என்பதையும் பின்பற்றி இந்நால் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டு மென்றும் தோற்றுகின்றன.
|
கோயிலைப் பாடிய பகுதியில் காளி நாகளை விளித்து முருகக் கடவுள் ஆளுடைய பிள்ளையாராகி வந்து சமணரை வாதில் வென்ற கதையைக் கூறும படி கட்டளையிட அவ்வாறே கலைமகள் கூறுவதாக ஆளுடைய பிள்ளையாருடைய சரித்திரப்பகுதி கூறப்
படுகின்றது.
பிள்ளையார் பாண்டியனுடைய உ ட ம் பில் திருக்கையை வைத்தவுடன் அவனுக்கு இருந்த கூன் நீங்கி உடம்பு பொன்னிறம் பெற்றது. பின்பு சமணர் களை அரசன் சழுவேற்றப்புகுகையில், ‘ஈது ஆகாது’ என்று பிள்ளையார் விலக்கியருளச் சமணர் தாம் கூறிய சபதம் தவறலாகாதென்று சொல்லி வலிந்து தாமே கழுவேறினர். பிறகு பிள்ளையார் சீகாழிக்கு எழுந்தருளினார்.
ஒருகூன் மிசை வைத்த திருக்கைபுறத்
தொருகூன்மிசை வைத்தனர் வைத்தலுமே இருகூனு கிமிர்ந்தன. தென்னவர்கோன்
முதுகுக்தட மார்பு மிடம்பெறவே
தக்க.- 2 16