டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 123
ஆதிச்செழி யற்கொரு கைம்மலர்பொன்
னடையப்புக லிக்கிறை வெப்பழலால்
வேதிக்க வுடம்பொரு பொன்மயமா
யொளிவிட்டு விளங்கினன் மீனவனே
-தக்க. 217
என்று கூன் நீங்கியதைப் பாடுகின்றார் ஒட்டக்கூத்தர்.
‘கூழடுதலும் இடுதலும் பகுதியில் இரண்டாம் இராசராசனுடைய முன்னோர்களையும் அவனையும் வாழ்த்துதல் காணப்படுகின்றது. +
அழிவங்த வேதத் தழிவு மாற்றி
யவனி திருமகட் கரகமன்னர் வழிவந்த சுங்கத் தவிர்த்த பிரான்
மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே
தக்க. 775
என்றவாறு அவன் முன்னோர்கள் வாழ்த்தப் பட்டுள்ளனர்.
‘வாழ்த்து’ என்ற பகுதியில் நூலாசிரியர் தம்மை ஆதரித்தவர்களுள் ஒருவனும் இந்நூலைச் செய்வித் தோனுமாகிய இராசராசசோழனையும் பிறரையும் வாழ்த்துதல் காணப்படுகின்றது. இப்பகுதியின் ஈற்றி லுள்ள மூன்று தாழிசைகளால் உறையூரையும் காவிரி யையும் திருமசள் கலைமகள் முதலியோரையும்
தமிழையும் ஆசிரியர் வாழ்த்துகின்றார்.
வாழி தமிழ்ச்சொற் றெனிந்த நூற்றுறை
வா ழி தமிழ்க்கொத் தனைத்து மார்க்கமும் வாழி திசைக்கப் புறத்து நாற்கவி
வாழி கவிச்சக் ரவர்த்தி கூத்தனே.
-தக்க. 814