பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 129*

இவர் தமிழ் மொழியிலும் அதன் வளர்ச்சியிலும் அதிக ஈடுபாடுடையவர் என்பது இந்நூலால் கன்கு விளங்குகின்றது.

கடவுள் வாழ்த்தில் திருஞான சம்பந்த மூர்த்தியை வாழ்த்தியிருத்தலாலும், அவர் கதையைக் கோயில் பாடியதிற் புகுத்தி விளங்கப் பாராட்டியிருத்தலானும், பிறவற்றாலும் இவருக்கு அவரிடத்திருந்த பற்றும் பக்தியும் வெளிப்படையாகத் துலங்குகின்றன.

இவர் கன்றியறிவிற் சிறந்தவர்; இந்நூலில், பொதுவாகச் சோழர்களைச் சிறப்பித்தும் சிறப்பாகத் தம்மை ஆதரித்த சோழர்களைப் பலபடப் பாராட்டி யும் காவிரிப்பூம்பட்டினத்திருந்த கொடையாளராகிய பல்லவராயரென்று பட்டம் பெற்ற கம்பி பிள்ளையை யும் கல்ல சூழ்நிலையிலெடுத்துச் சிறப்பித்துமிருப் பதால் இது தெளிவாகின்றது.

காங்கேயன் காலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், ஈட்டியெழுபது முதலியன இவர் செய்த நூல்கள். அன்றியும் இவர் அவ்வப்பொழுது செய்தன வாகச் சில செய்யுட்கள் தமிழ் நாவலர் சரிதை முதலியவற்றிற் காணப்படுகின்றன.

‘ஒட்டக்கூத்தர் இலக்கண இலக்கியங்களில் வல்லவர்: வடமொழிக் கல்வியும் கிரம்பியவர். பழைய மரபுகளை விடாமல் போற்றி, பிறர் செய்யும் தவறுகளைக் கடுமையாக எடுத்துரைத்துக் கடிபவர்’ (தமிழ் இலக்கிய வரலாறு. ப. 157) என்று டாக்டர் மு. வ. அவர்கள் குறிப்பிடுவது இங்குச் சிந்திக்கத்

தக்கது.