பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டர்க்டர் சி. பாலசுப் பிரமணியன் 133

சைவத்தின் தொன் மை

சைவ சமயத்தின் தொன்மையை அறிய வரலாற்று அடிப்படையில் காம் அணுக வேண்டியுள்ளது. ஆராய்ச்சியாளர் மனித வரலாற்றைப் பல காலங் களாகப் பிரித்துள்ளனர். அவை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வெண்கலக் காலம் எனப் பலவகைப்படும். இக்காலங்களிலெல்லாம் உலகத்தில் சைவம் இருந்ததா என்ற வினா, சைவத்தின் தொன்மையையறிய வழிவகுக்கும்.

அக்காலத்து நூல்கள் இன்று கமக்குக் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் வழிபட்டு வந்த கல் முதலியவற்றாலான பொருள்களைக் கொண்டே அவர்தம் சமயத்தை காம் துணிய வேண்டியவர்களாக

இருக்கிறோம்.

புதிய கற்காலத்தைச் சார்ந்த, லிங்கத்தைக் குறிக்கும் கற்கள் பல கிடைத்துள்ளன. சிவபெருமான் மலைவாழ் கடவுள், யானைத் தோலையும் புலித் தோலையும் உடையவர், அவர் விலங்குகளுக்குத் தலைவர் என்னும் பொருள்படப் பசுபதி என்னும்

பெயரால் அழைக்கப்படுகின்றார். இவற்றையும், அவரைப் பற்றிய கதைகளையும் கோக்க - அவர் மலைமகள் கணவர் என்பதையும் கோக்க-சிவ

பெருமான் பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத் திலும் மக்களால் வழிபடப்பெற்று வந்தவராவார் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

வா.-9