பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 137

மத சித்தாந்தங்களை எல்லாம் கியாய முறையில் ஆராய்ந்து, முப்பொருள் களைப் பற்றித் தானும் ஒரு முடிவிற்கு வந்துள்ளது. இச்சைவசித்தாந்தத்தைச் சிறப்பு வகையில் சித்தாந்தம் என்றே குறிப்பது சைவ மரபாகும்.

கடவுளைப் பதி’ என்றும், உயிர்களைப் பசு என்றும், உலகத்தைப் பாசம்’ என்றும், சித்தாந்த சாத்திரங்கள் கூறும். எல்லா ஆராய்ச்சிகளும் இந்த மூன்றுக்குள் அடங்கும். இவை பற்றிய அறிவை வளர்த்தல் ஆன்மகல முன்னேற்றத்திற்குத் தேவை யானதாகும்.

பதி

கடவுள்’ என்னும் பெயர் பொருள் கிறைந்த தொன்று. அதனைக் கட உள்” எனப் பிரித்தால், பரம்பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளது என்னும் உண்மை புலனாகிறது. கடவு உள்” என்று பிரித்தால், எல்லாவற்றின் உள்ளிருந்தும் கடவுவது: செலுத்துவது என்னும் உண்மை புலனாகின்றது. தானாக இயங்க மாட்டாத சடப்பிரபஞ்சத்தை ஒரு முறைப்படி ஏதோ ஒரு சக்தி இயக்குவை தயும், அதனால் உயிர்கள் படிப்படியாய்த் தடைகளினின்றும் விடுபட்டுப் பேரானந்தப் பெருகிலை அடை வதையும் உணர்கிறோம். இப்படியுள்ள பரம்பொருள் ஒன்றே தான், ஒருவனே தேவன்” என்றார் திருமூலர். அப் பொருள் உருவம், அருவம், குணம், குறி இவைகளை யெல்லாம் கடந்துள்ளது. கிர்மலமானது, கித்திய மானது, சலனமற்றது, அகண்டிதமாய் என்றும்