பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப.ாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 139

U8:

ஆன்மாக்களாகிய நமக்குப் பசுக்கள் என்று பெயருண்டு. பாசத்தால் கட்டுண்டிருக்கிறபடியால் நமக்கு இப்பெயர் கிடைத்துள்ளது. ஆன்மாவின் சொரூபம் அறிவு. அது சத்துப்பொருள்; ஆனால்

பதியை ப் போல் சுத்தசித்தன்று. ஆன்மாக்கள் எண்ணவில்லாதவை; என்றும் உள்ளவை; எவராலும் படைக்காதவை; சிவத்திற்கும் பாசத்திற்கும்

வேறானவை.

ஆன்மாக்களுக்கு இரண்டு தன்மைகள் உள்ளன. 1. பற்றுக்கோடின்றி கில்லாமை. பாசத்தையாவது அல்லது பதியையாவது பற்றியே ஆன்மா கிற்கும். 2. சார்ந்ததன் வண்ணமாதல்; எதைச் சார்ந்து கிற்கின்றதோ அதனோடு கலந்து, அதன் தன்மை யைத் தான் பெற்று இலங்கும். ‘யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் கின்று’ ஆண்டவனருளால், முடிவில் பந்தம் அறும் பளிங்கனைய சித்து’ சிவன். அதன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மை’ யுடைவன் சிவன்.

பசுவாகிய ஆன்மா பதியாகிய இறைவன் அருளால் தான் அவனை அடைய முடியும்.

அவனருளால் அவன் தாள் வணங்கி

என்பது மணிவாசகர் திருமொழி.

பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியிங் கின்பம்வங் தெய்திடும் சிறப்பர் சேறையுட் செங்கெறி யான்கழல் மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே