பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 o, வாழ்வியல் நெறிகள்

என்ற அப்பர் பெருமான் திருவாக்கு இறையருளின் பெரும் பயனை விளக்கி நிற்கும்.

சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தங்த எந்தலைவன்......

என்ற சுந்தரர் திருவாக்கும் இறையருளை விளக்கும்.

பசுக்கள் பதியை அடைய முடியாமல் தடுக்கும் பாசத்தின் நீங்கிப் பதியையடைய இறையருள் பெருக் துணை நிற்கும்.

பாசம்

இது ஆணவம், மாயை, கன்மம் என்னும் மூன்று பிரிவினையுடையது. இவற்றில் ஆணவம்தான் மூல மலம். இஃது ஆன்மா அறியாதபடி அதன் அறிவு முழுமையும் மறைக்கும். செருக்கு, மோகம், பேராசை, லோபம் முதலிய தீய குணங்களால் இஃது ஆன்மாக் களை அலைக்கும். ஆணவம் தன்னையும் காட்டாது; பிற பொருளையும் காட்டாது-ஆகையால் இஃது இருளினும் கொடிய பேரிருளாகும்.

மாயை என்பதும் பாசத்தின் ஒரு பகுதியாகிய சடப்பொருள். இதுவும் உள்பொருளே. மாயையி லிருந்துதான் 36 தத்துவங்கள் இறைவன் சக்தியால் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த மாயை சுத்த மாயை’, ‘அசுத்த மாயை’ என இரண்டாகவும், சுத்த மாயை’, ‘அசுத்த மாயை’, ‘பிரகிருதி மாயை’ என மூன்றாகவும் பகுத்துச் சாத்திரங்கள் விளக்கிக் கூறும், -- ==