பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 141

கன்மம் என்பதும் பாசத்தின் ஒரு பகுதி. நாம் பெறும் பிறவிகளின் இயல்பை இது திடப்படுத்தி கானாவிதமான இன்ப துன்பங்களை விதிமுறைப்படி ஊட்டி வைக்கும்.

இப்பாசத்தினின்றும் உயிர்கள் நீங்க வேண்டும். முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள். மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் என்ற அப்பர் திருத்தாண்டகத் திருப்பாடல் பாசத்தின் நீங்கிய பசு பதியையடைந்த நிலையை விளக்கிக் காட்டும்.

இவ்வாறு சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் பற்றி விளக்குகிறது. இவற்றின் விரிவைச் சாத்திர நூல்களுள் கண்டு கொள்க. இனிச் சைவ சமய

அருள் நூல்கள் கூறும் இன்றியமையாக் கருத்து களைக் காணலாம்.

அன்பு

‘அன்பே சிவம்’ என்னும் தொடரில் சைவத்தின் கடவுட்கொள்கை முழுவதும் அடங்கும் எனலாம். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்யே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்பது சைவ நூற்களில் மிகப் பழமையான திருமந்தி ரத்தில் திருமூலர் கூறும் அரிய உண்மை ஆகும். ‘அரும்பொருளாக உள்ள இறைவன் அன்பில் உள்ளான் என்பதனை யுணர்ந்த நிலையில்தான் தேவாரத் திருவாசகப் பாசுரங்கள் எழுந்தன; திருவைப்