பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வாழ்வியல் நெறிகள்

யும் பெற்றவர்கள் ஒரு சிலராகத்தான் அமைவார்கள். தாமரையிலை போலப் பாட்டும் புகழும் இன்றி மாண்டவர்களே பலராக இருப்பர். புலவர்களின் பாடல்களைப் பெற்ற புகழுடையவர்கள் தாம் ஆற்றும் கடமைளைச் குறைவறச் செய்து முடிப்பர்; அதன் பயனாக வானத்திலே ஒட்டுவான் இல்லாத வானவூர்தியிலே ஊர்ந்து இன்புறும் பெரும் பொருளைப் பெற்று இன்புறுவர்.

இவ்வுலகிலே சந்திரன் ஒர் உண்மையை விளக்கிக் காட்டிக் கொண்டே திரிகின்றது. செல்வம் தேய்ந்து போவது உண்டு; பெருகுவது உண்டு; அடியோடு அழிந்து போவதும் உண்டு; மீண்டும் பிறப்பதும் உண்டு என்ற உண்மையைச் சந்திரன் தன் செய்கை யால் வெளிப்படுத்துகின்றது. கற்றறியாதவரையும் ‘இந்த உண்மையைக் காணுங்கள்’ என்று கூறுவது போலக் காட்டி கிற்கிறது.

ஆதலால் இந்த உலகிலே ஒன்றைச் செய்ய வல்லவராயினும் சரி; வல்லமை அற்றவராயினும் சரி; வறுமையால் வாடி வருந்தி வந்தோர் யாராயினும் சரி, அவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்க வேண்டும்,

அவர்களுடைய வயிற்றுப் பசியைப் பார்த்து. அவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக வேண்டும்

என்றும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்று சங்கப் புலவர் சாற்றினார்.

சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேள் காற்றிதழ் அலரின் கிரைகண் டன்ன வேற்றுமை யில்லா விழுத்துணைப் பிறந்து வீற்றிருந் தோரை எண்ணுங் காலை