பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Yoo வாழ்வியல் நெறிகள்

பிலுள்ள பிற நூல்கள் பாடப்பட்டன. தாயுமானாரும். பட்டினத்தடிகளும், குமர குருபரரும், வள்ளலாரும் பிறரும் இறைவனை அன்பு வடிவினனாக, அடியா ரோடு நேர்த் தொடர்பு கொண்டு தன் அன்பைப் பொழிபவனாகவே கண்டார்கள். அந்த அன்புக்கு ஆட்பட்டுத் தலைவணங்கி அதன் திறத்தை வியந்து போற்றுகின்றார்கள்.

மணிவாசகர், இன்பமே என்னுடை அன்பே’ என்று இறைவனைப் பாடுகின்றார். இவ் இறையன்பு ஆட்கொள்ளும் அன்பு என்ற கருத்து அனுபவ விளக்கம் சைவ நூல்களில் காணக் கிடக்கின்றது. அணைக்கும் இறையன்பின் ஆழத்தைக் காட்டத் திருவிளையாடல் புராணத்தில் வரும் மாபாதகக் தீர்த்த படலம் ஒரு சிறந்த சான்று ஆகும்.

அடுத்து சைவத்தில் அடியார்களிடம்-உயிர் களிடம் செலுத்தப் பெறும் அன்பு-பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள், சுற்றம், அயலார், ஊர், நாட்டார் என்று விரிந்து, மேலும் விலங்கு, பறவை, கொடி என்று மற்ற உயிர்களிடத்தும் படர்ந்து, உயிரினங்கள் அனைத்தினும் இறைமையை உணரத் தலைப்பட்ட காலத்து மெய்யுணர்வு தோன்றும். “பெறவே வேண்டும் மெய்யன்பு’ என்பது திருவாசகம். அம்மெய்யுணர்வு மேலிடவும், பாசபக்தம் நீங்க, மக்கள் பேரா இன்பநிலை எய்தப் பெறுவர்.

இம்மெய்யுணர்வே,

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுளித் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரங்தார்க் கன்பராகில் அவர் கண்டிர் நாம் வணங்கும் கடவுளாரே என்று அப்பர் பெருமானைப் பாட வைத்தது.