பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் 9. பாலசுப்பிரமணியன் = 14?

தனித்தும் எல்லாச் சமயங்களிலும் ஊடுருவிப் பாய்ந்தும் நிற்பது’ என்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் சைவத்தின் சமரசம் என்ற தம் நூலுள் விளக்குகிறார்.

முடிவுரை

மேற்கூறிய செய்திகளால் சிவ சம்பந்தமுடையது சைவம் என்பதும், அது மிகத் தொன்மையான சமயம் என்பதும் அச்சைவத்தைப் பற்றி அறிய அருள் நூல்களும், சைவ சித்தாந்த நூல்களும் துணை செய்கின்றன என்பதும், அன்பு, தொண்டு, விருந் தோம்பல், அருள் நூல்கள் ஓதுதல் ஆகியவை சைவத்தின் முதன்மைக் கருத்துகளாகும் என்பதும் புலனாகும். சைவ சமயம் எல்லாச் சமயங்களையும் மதித்துப் போற்றும் சமயப்பொறை கொண்ட சமயம் என்பதும் தெரியலாகும்.

துணைநூல்கள்

அருணாசலம், ப. சைவ சமயம் (ஒர் அறிமுகம்) நாகர்கோவில், 1979.

அருணாசலம், மு., சைவ சமயம், பாரி கிலையம், சென்னை, 1969.

சுந்தரமூர்த்தி, கோ., சைவ சமயம், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, இரண்டாம் பதிப்பு, 1979.

தயானந்தன் பிரான்சிஸ், தமிழ்ச் சைவம், கிறித்துவ இறையியல் நூலோர் குழு, சென்னை, 1972.

சைவ சமயச் சொற்பொழிவுகள், சைவ சித்தாந்த மகா சமாசம், சென் ைன. 1959.