பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வாழ்வியல் நெறிகள்

திலேயே பெற்று விடலாம்’ என்றும் இவ: தமமுடைய பாடல்களில் வற்புறுத்தியிருக்கக் காணலாம்.

இக்காலத்தில் பக்திப் பாடல்கள் எழுதுவோர் பலரெனலாம். ஆயினும் அவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவராக வி ள ங் கு ப வ ர் கவியரசு கண்ணதாசன் ஆவர். இவர் சிறுகூடற்பட்டி வி சா லா ட் சி அம்மையையும், திருவேங்கடத்து வேங்கடவனையும் கெக்குருகிப் பாடியுள்ள பாடல்கள் கல் மனத்தையும் கரையச் செய்யும் பான்மையன வாகும். இவருடைய தெய்வப் பாடல்கள் படிப்போர் மனத்தில் ஓர் எழுச்சியைத் தந்து கிற்கும் முறையில் அமைந்திருக்கக் காணலாம்.

  • புலவர் ஒருவர் தாம் கண்டறிந்த ஒன்றையோ, கேட்டறிந்த ஒன்றையோ, கன்றாக உள்ளத்தில் உணர்ந்து, கற்பனையோடு வளர்த்து, கலைவடிவம் தந்து சொற்களால் புலப்படுத்துவது நல்ல இலக்கியம் ஆகும்’ என்று கல்ல இலக்கியத்தின் தன்மையினைப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் விளக்கியுள்ளார்.”

கலைகளில் சிறந்தது இலக்கியக் கலையாகும். நில்லாத அழகினை நிலைபெறச் செய்வது இலக்கியமே எனலாம். அந்திச் செக்கர் வானத்தின் அழகுக் காட்சியினை காம் கினைத்த கேரத்தில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அந்த அந்திச் செக்கர் வான அழகைத் தீஞ்சுவைக் கவிதையில் கவிஞனொருவன் சித்திரமாகத் திட்டி வைத்து விடுவானேயானால் அஃது உலகுள்ளளவும் கிலைத் து