பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 1593

இலங்கும் இறைவனை-இறை நெறியை இனிதுறப் பாடியவர் குமரகுருபரர் எனலாம். இவருடைய பாடற் சிறப்பினையும் கெஞ்சப் பொதுமையினையும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பின்வருமாறு. பாராட்டுவர் :

‘ஒரு கடவுள், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு காடு என்னும் வரையறையின்றிப் பல கடவுளரையும் பல மொழிக் கருத்துக்களை யும், பல கலைச்செய்திகளையும், பல காட்டு வருணனைகளையும் இவருடைய செய்யுட் களிற் காணுகின்றோம். இக்காட்டின் தென் திசையிலுள்ள செக்துரையும், வடகாட்டி லுள்ள காசியையும் இவர் கண்டறிந்து பாடு கின்றார். தாம் பிறந்த பாண்டி காட்டையும், குருவைப் பெற்ற சோழநாட்டையும், வாழ்ந்து வந்த கங்கைக் கரையையும் வருணிக்கின்றார். சிவபெருமான் முதல் கலைமகள் வரையுள்ள தெய்வங்களைப் பாராட்டுகின்றார். சைவ பரிபாஷைகளோடு வைணவ LifിLITങ്ങ ബു களையும் ஒருசார் அ ைம க் கி ன் றார். இவற்றால் இவர், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் மனோபாவமும், விரிந்த உலகியலறிவும் உடையவர் என்பதை உணர லாகும்.’

குமரகுருபரர் பாடியுள்ள நூல்கள் வருமாறு : (1) கந்தர் கலிவெண்பா (2) மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் (3) மதுரைக் கலம்பகம் (4) நீதிநெறி விளக்கம் (5) திருவாரூர் கான்மணிமாலை (6) முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் (7)சிதம்பர மும்மணிக்கோவை: