பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வாழ்வியல் நெறிகள்

இடம் காடிச் சென்று விடுக எனப் பறையழைந்து கூறிவிட்டே பின்னர்ப் படை கடத்திச் சென்றனர் என்பதனை கெட்டிமையார் என்னும் புலவர் எடுத்துரைக்கின்றார்.

ஆவும் ஆகிகர் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை விரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறா தீரும் எம்.அம்பு கடிவிடுதும் நும் அரண்சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை மறம்.

பழங்காலத்தில் உண்டி கொடுத்தவர்களை உயிர் கொடுத்தவர்களாக மதித்தனர் என்பது,

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது கிலத்தொடு நீரே

-புறநானுாறு : 18; 18-21

என்னும் புறகானுாற்றடிகளால் தெரிய வருகின்றது. மேலும் கம் முன்னோர்கள், உரத்த அதிகாரக் குரலில் ஆணையிடுதலையும் விரைந்து செல்லக் கூடிய வாகனங்களில் பயணம் செய்ததையும் செல்வமாகக் கருதவில்லை என்பதும், அது அவர்களில் முன்னை கல்வினை என்றும் கருதினர் என்பதும் சான்றோர்கள் படும் துன்பத்தைப் போக்கும் திறனுடையவர் களே செல்வம் பெற்றவர்களாகக் கருதப் பெற்றனர் என்பதும்,