பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 167

கான்படும் பாடு சிவனே உலகர் கவிலும் பஞ்சு தான்படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான்

படுமோ கான்படு பண்ணியின் மரன்படுமாறு கலங்கி கின்றேன் என்படுகின்றனை என்று இரங்காயென்னில்

என்செய்வேன்’

‘யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்” என்று சொன்ன தாயுமானவரைப் போலவே இவரும்,

கான்பெற்ற கெடும்பேற்றை ஓதிமுடியாது

என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே.”

என்று இறைவனிடம் முறையிடுகின்றார்.

பசித்து வந்தவர் புசித்துப் பசியாறி முகம் மலர அவர்க்கு உணவு வழங்க வேண்டும் என்பது இராமலிங்கர் கண்ட நெறியாகும். மணிமேகலைக் காப்பியத்திற்குப் பின்னர் இந்நெறி பெருமளவில் இராமலிங்கர் பாடல்களில்தான் வற்புறுத்தப்பட்டிருப் பதைக் காணலாம். சாதி சமயச் சழக்கற்று மக்கள் மாநிலத்தில் வாழ வேண்டும் என்றும், கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும் என்றும் இராமலிங்க அடிகள் அயராது பாடுபட்டார்.

சாதியும் மதமும் சமயமுஞ் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையுந் தணந்தேன்

ஒதிய அனைத்தும் யேறிந்தது கான்

உரைப்பதென் னடிக்கடி யுனக்கே.

கால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

கவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணங் தோல்வருணங் கண்டறிவா ரிலைே

விழித்திதுபா ரென்றெனக்கு விளம்பியசற்குருவே."