பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 169

என்று கொல்லாமையை வற்புறுத்தினார். வடலூர் வள்ளற் பெருமானோவெனில் மேலும் வலிவு கூட்டிக் கொல்லாமையை வற்புறுத்தியிருக்கக் காணலாம்.

  • ஆருயிர் கொல்லார் மேலோர்

அறவினை யறிந்த கல்லோர்

தீமனம் அடக்க வல்லார்

இவர்களே தேவராவார்

காமராய்க் கற்பழித்தோர்

களவுசெய் துடல்வளர்த்தோர்

மாமிசம் தின்போரெல்லாம்

மானிடப் புலையர் தாமே.”

பிறவுயிர்களைக் கொன்று தின்போர், கங்கை முதலான புண்ணிய திகளிற் பொருந்தி நீராடினாலும், கடவுளைப் பூசித்தாலும், மாரிபோல் வாரி வழங்கினா லும், ஞானசாத்திரங்கள் பலவற்றை கவை நீங்கக் கற்றிருந்தாலும் கரகருலகடைந்து க லி வு று வ து திண்ணம் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகின்றார் :

  • கங்கையில் புகுந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்

மங்குல்போல் கோடிதானம் வள்ளலாய் வழங்கிட்டாலும் சங்கையில்லாத ஞானசாத்திரம் உணர்ந்திட்டாலும் பொங்குறு புலால் புசிப்போன் போய்கர கடைவன்

அன்றே.’

சிறு தெய்வ வழிபாடு பெருகி, அச்சிறு தெய்வங் களுக்குக் கள்ளும் புலாலும் ஆட்டுக் கிடையும் கோழி களும் படையலிடும் வழக்கம் பெருகிப் போயிருந்த காலத்தில் இராமலிங்கர் தோன்றினார். எனவே அத்தகைய சிறு தெய்வ வழிபாட்டினை உறுதியாகக் கண்டிக்கிறார் வள்ளற் பெருமான் :