பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வாழ்வியல் நெறிகள்

  • கலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ

நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்

பலிக்கடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவுங்கண்டே

புந்தி கொந்து உளம்கடுக் குற்றேன்

கலியுறு சிறிய தெய்வங் கோயில்

கண்ட காலத்திலும் பயந்தேன்.’

சுருங்கச் சொன்னால் இராமலிங்கரின் கோட் பாட்டினைப் பின்வரும் அவர் பாடல் புலப்படுத்தும் எனலாம்.

சனத்து ணையும் பேதமுறா தெய்வுயிரும் தம்முயிர்

போலெண்ணி யுள்ளே

ஒத்துஉரிமை யுடைய வராயுவக்கின்றார்

யாவரவ ருளங்தான் சுத்த

சித்துருவா யெம்பெருமா னடம் புரியு மிடமென

கான்தேர்ங் தேனங்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடன் ன்

சிங்தைமிக விழைந்த தாலோ.’

முடிவுரை

குமரகுருபரர், சிவப்பிரகாசர், தாயுமானவர், இராமலிங்கர் ஆகிய இக்கால்வரும் சைவ சமய நெறி யினைப் பரப்பிய சான்றோர்கள் எனப் பொதுப்படை யாகச் சொன்னாலும், குமரகுருபரரை வடகாட்டிலும் சைவ சமய மடம் கட்டிச் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றிப் பலதிறத்தனவான நூல்களை இயற்றித் தெய்வத் தமிழ்த்தொண்டு செய்தவர் எனலாம். பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை முதலான சிறு