டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 171,
பிரபந்தங்களை யும் சிந்தை இனிக்கப் பாடிய பெரும் புலவர் என்று இவரை காம் கொண்டாடலாம்.
பெண் பாற்பிள்ளைத்தமிழ் நூல்களில் இவருடைய மீனாட்சியம்மை பிள்ளைத் துமிழே சிறந்தது எனலாம்.
மீனாட்சியம்மையை இவர் போற்றிப் பரவும் திறம் படித்து மகிழத்தக்கது. செந்தில் வடிவேலனை இவர் “கந்தர் கலிவெண்பா'க் கொண்டு க வி னு ற ப் பாடியுள்ளார். தம் குருகாதர் மீது பண்டார மும்மணிக் கோவை"யும் யாப்பு இலக்கண மேற்கோட்
செய்யுட்கெனச் சிதம்பரச் செய்யுட்கோவை'யும் இவர் பாடியுள்ளார்.
சிதம்பர மும்மணிக் கோவையில் இவர் அமைதி யான கல்வாழ்விற்கென இ ர ண் ட டி க ைள த் தந்துள்ளார்.
- செல்வம் என்பது சிங்தையின் நிறைவே.
அல்கா கல்குரவு அவாவெனப் படுமே ‘
என்பவைதான் அவ்வடிகள். கலைமகளாம் சரசுவதி தேவியை கெஞ்சுருகப் பாடிக் களிக்கிறார் குமரகுருபரர். கவிதா சக்தியையே கலைமகளாக உருவகம் செய்து இவர் பாடியுள்ள பாடலில் இவர்தம் தமிழ் கெஞ்சத் தினைக் காணலாம் :
அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளங்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே,
ககலகலா வல்லியே!'