டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 173
“எப்பொழுதும் பொய்தான் புகல்வேன்; சற்றும் மெய் பேசுவது கிடையாது.’
‘பிறர் மெச்ச அறிவுரைகள் புகல்வேன். கான் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி கடந்து, உன் அருளைப் பெறாமல் வினே கழிக்கிறேன். நான் ஒர் அறிவிலி.’
இந்தக் கருத்தமைந்த பாடற்பகுதி வருமாறு :
‘'எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என்
இதயமும் ஒடுங்கவில்லை; யான் எனும் அகங்தைதான் எள் அளவும் மாறவில்லை
யாதினும் அபிமானம்என் சித்தமிசை குடிகொண்டது, ஈகையொடு இரக்கம்என்
சென்மத்தும் நான் அறிகிலேன் சீலமொடு தவம் விரதம் ஒருகனவில் ஆயினும்
தெரிசனம் கண்டும் அறியேன் பொய்த்தமொழி அல்லால் மருந்துக்கும் மெய்மொழி
புகன் றிடேன்; பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடாப் பேதை கானே.”
இராமலிங்கர் கந்தகோட்டத்துச் சண்முகரை விளித்து வேண்டும் வரமே உயர்வரம். இறைவனை ஒருமையுடன் கினைக்கும் உத்தமர் தம் உறவும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர் கட்பும், இறைவன் புகழ் பாடும் நிலையும், பொய் பேசாத் தன்மையும், மதமான பேய் ஏறாத மனமும் பெண்ணாசை துறந்த பெருகெஞ்சும், இறைவனை அமறக்காத மனமும், அறிவும் அவன்அருளும் நோயற்ற