பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

குமரகுருபர முனிவர் காசியில் தங்கி யிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவபோகம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகமும் காசிக் கலம்பகமும் இவரால் இயற்றப் பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹறிந்துஸ்தானி பாஷையிலும் த மி பூழி லு ம் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த ராமபக்தராகிய துளளலிதாஸர் அந்த பிரசங்கங் களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராம யணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹறிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத் தில் அ ைம த் து க் கொண்டனரென்றும் கூறுவர்.

பரீகுமரகுருபர சுவாமிகளுடைய செய்யுட் களில் தனிச் சிறப்புப் பெற்று விளங்குவது அவற்றின் இன்னோசையேயாகும். ஏனைப் பாட்டுக்களிலிலிருந்து இவருடைய செய்யுட் களைச் செவிப்புலன் கொண்டே வேறுபடுத்தி விடலாம். இவற்றைக் கேட்கும்போது கமக் குத் தென்பாண்டி காட்டுப் பொருனை கதி யின் ஒட்டம் கம் ஞாபகத்துக்கு வருகின்றது. சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றினோடு ஒன்று செவிக்கினிமை தரும் வண்ணம் பொருந்தி அமைந்துள்ளன. பொருளிலே கருத்துச் செல்வதற்கு முன் செய்யுட்களின் இசை கம் கருத்தை இழுக்கின்றது.

179