பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 183

செஞ்செவி கைப்பயான் தெரித்த சின்மொழி அஞ்செவி மடுத்தாங் களித்தனன் அதனால்

சகலகலாவல்லி மாலை: 101: 21-22

தேத்தமிழ் தெளிக்கும் செங்காப் புலவீர்

பாத்தொடுத் தடுத்த பரஞ்சுடரை

காத்தழும் பிருக்க ஏத்துமின் நீரே

டகாசிக் கலம்பகம்: 101: 24-30

இல்லறம், துறவறம் ஆகிய இரண்டு குறித்தும் சிதம்பர மும்மணிக் கோவையில் இவர் தந்துள்ள விளக்கங்கள் அருமைப்பாடு உடையனவாகும்.

இல்லறம்

இல்லறத்தின் இலக்கணம் வருமாறு :

இல்லறம் துறவறம் எனச் சிறந் தனவே அங்கிலை யிரண்டினுள் முன்னது கிளப்பிற் கற்ற நூல் துறைபோய்க் கடிமனைக் கிழவன் கற்குணம் கிறைந்த கற்புடை மனைவியோடு அன்பும் அருளும் தாங்கி இன்சொலின் விருந்து புறங்தங்து அருந்த வர்ப் பேணி ஐவகை வேள்வியும் ஆற்றி இவ்வகை கல்லற கிரப்பிப் புல்புகழ் கிறீஇப் பிறர்மனை கயவா அறன்மனை வாழ்க்கைக்கு வரையா காளின் மகப்பேறு குறித்துப்

பெருகலம் துய்க்கும் பெற்றித் தன்றே.

-சிதம்பர மும்மணிக்கோவை 21 23-33

இதன் பொருள் வருமாறு :

‘கல்ல நூல்களைக் கற்று, அவற்றின் வழி கின்ற கற்புடைய மனைவியோடு மகப்